நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை.! அவசர உதவி அழைப்பு எண்கள் அறிவிப்பு…
நீலகிரி: தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் மழையில் தாக்கம் அதிகமாக இருந்தது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, மரம் சரிந்து விழுதல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மழைநீர் ஊருக்குள் புகுந்து மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இதனால் பல்வேறு பகுதியில் போக்குவரத்தும் தடைபட்டது.
நேற்று வரை கொட்டித்திருத்த கனமழை இன்று சற்று தணிந்து உள்ளது. இதனால், இருந்தும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதாலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும், மக்கள் அவசர உதவிகளுக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொடர்பு கொள்ள எதுவாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரி ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை – 1077.
- உதகை கோட்டம் : 0423 – 244 5577.
- குன்னூர் கோட்டம் : 0423 – 2206002.
- கூடலூர் கோட்டம் : 0426 – 261295.
- உதகை வட்டம் : 0423 – 2442433.
- குன்னூர் வட்டம் : 0423 – 2206102.
- கூடலூர் வட்டம் : 0426 – 261252.
- பந்தலூர் வட்டம் : 0426 – 220734.