நீலகிரி:ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் உள்ள ஹெத்தை அம்மன் கோயில் படுகர் சமுதாய மக்களின் குல தெய்வமாக கருதப்படுகிறது.இதனால், நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஹெத்தை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.அதன்படி,இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கோல் நாட்டுதல் விழாவுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான ஹெத்தை அம்மன் உலா இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,படுகர் சமுதாய மக்களின் ஹெத்தை அம்மன் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் அறிவித்துள்ளார்.
அதன்படி,நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஈடுசெய்யும் வகையில் ஜன.8 ஆம் தேதி( சனிக்கிழமை) வேலைநாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…