நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!
நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், தேனியில் கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சின்னக்கல்லார்-10, அவலாஞ்சி-9, சோலையாறு-8.வால்பாறை-7, பந்தலூர்-6 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.