நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வாடா தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
நாளை நீலகிரியில் கனமழைக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு என்றும் செப்.1,2 தேதிகளில் வாடா கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், கேரள, கர்நாடக கடலோர பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.