கனமழை…நீலகிரி- 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!
மிக கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சா.ப. அம்ரித். இதனால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக நாளை (06.07.2023) ஒருநாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு@tnschoolsedu @TNDIPRNEWS
— Collector & DM, The Nilgiris (@collrnlg) July 5, 2023
கோவைக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவை வால்பாறையில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.