மீண்டும் தொடங்க உள்ள நீலகிரி மலை ரயில் சேவை ! மத்திய அமைச்சர் தகவல்
கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் நாடு முழுவதும் ஊரடங்கு இருந்து வருகிறது.ஆனால் இந்த சமயத்தில் நீலகிரி மலை ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.தற்போது நிலைமைகள் ஓரளவு சீராகி வரும் நிலையில் பேருந்து,ரயில்,விமான சேவைகள் குறிப்பிட்ட அளவு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீலகிரி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்க உள்ளது.இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் நீலகிரி மலை ரயில்வேயின் அழகில் நனையத் தயாராகுங்கள். டிசம்பர் 31 முதல் மீண்டும் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
Get ready to soak in the beauty of Nilgiri Mountain Railway, Tamil Nadu.
This UNESCO world heritage site will resume operations from 31st December. A visual delight for tourists, it offers breathtaking views all along the way. pic.twitter.com/EgXjnjYh3x
— Piyush Goyal (@PiyushGoyal) December 29, 2020