நீலகிரி மாவட்டம் கூடலூரில் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கையில், இஸ்லாமிய தொழுகை பாடல் ஒலிப்பதை கேட்டதும் தனது பேச்சை நிறுத்தி வைத்தார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரை தொடங்கி, இன்று 20ஆம் நாளை எட்டியுள்ளார். நேற்று அவர் கேரள எல்லையை கடந்து தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியை வந்தடைந்தார்.
அங்கு, அவருக்கு, தமிழக மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். அங்கு, மலைவாழ் மக்களிடம் அவர்கள் குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, கூடலூரை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்த வேளையில், அருகில் உள்ள மசூதியில் இருந்து இஸ்லாமிய தொழுகைக்கான பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை அறிந்ததும், தனது பேச்சினை நிறுத்திவிட்டார் ராகுல் காந்தி.
சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, பின்னர் இஸ்லாமிய தொழுகை பாடல் முடிந்ததும் தனது பேச்சை மீண்டும் ஆங்கிலத்தில் தொங்கினார். அருகில் இருந்தவர் அதனை மொழிபெயர்த்து தமிழ் மொழியில் கூறினார்கள். இஸ்லாமிய தொழுகை பாடல் கேட்டதும், தனது உரையை நிறுத்திய ராகுல் காந்தியின் செயல் பலரால் பாராட்டப்பட்டது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…