கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனினும், இந்த புதிய கட்டுப்பாடுகளில், அத்தியாவசிய பணிகளான பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, எரிபொருள் வாகனங்கள் போன்றவை மட்டும் இரவு நேரத்திலும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் அவசர அவசரமாக தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர்.
மும்பை : கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வரும் சூழலில், வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது. இந்த…
டெல்லி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்து இருப்பதாக…
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…