இரவு ஊரடங்கு மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 10 மணியிலிருந்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து சென்னையில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 200 வாகன சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், போலீஸ் வாக்கி டாக்கி மூலம் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டு உள்ளதா என்பதை கண்காணியுங்கள். மருத்துவத் தேவை மற்றும் பிற அவசர தேவைகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்வதற்கு அனுமதி கொடுங்கள் என்றும், தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என்றும் அறிவுரை வழங்கியுள்ளார்.
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…