கடந்த வாரம் உளவுத்துறை ஆனது, லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் இருந்து 6 பயங்கரவாதிகள் இலங்கை வழியாக தமிழ்நாட்டிற்குள் ஊடுருவியதாக தகவல் அளித்திருந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோயம்புத்தூரில் தற்போதும் தீவிர சோதனை நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்று 20 என்ஐஏ அதிகாரிகள் கோயம்புத்தூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுவரை 15 வீடுகளில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிந்தும் எந்த போலீஸ் அதிகாரிகளும் வீட்டை விட்டு வெளியேற வில்லை அதனால் கூடுதல் பதற்றம் நிலவுகிறது. மேலும் சந்தேகப்படும்படியாக லேப்டாப், பென்ட்ரைவ் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூரில் முக்கிய ஐந்து இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்த திட்டமிட பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால், கோவை முக்கிய பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கோவை முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…