தமிழகத்தில் அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ தொடர்புடைய இடங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரில் நாடு முழுவதும் இதுவரை 106 நிர்வாகிகளை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் நடைபெற்று வந்த என்.ஐ.ஏ சோதனை நிறைவு பெற்றுள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல் உள்ளிட்ட புகார்களில் என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த சோதனையில் தமிழகத்தில் மட்டும் 10 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…