தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த NIA சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.
தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அங்கு 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதுபோன்று சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 8 மாவட்டங்களில் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை மற்றும் கேரளாவில் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில், தற்போது சோதனை நிறைவு பெற்றுள்ளது. கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில், அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, காலை முதல் மதியம் வரை நடந்த சோதனையில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை கார் வெடிப்பு வழக்கை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.