#BREAKING: திண்டுக்கல் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ சோதனை!
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை.
திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ (Popular Front of India) அலுவலகத்தில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ அலுவலக கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல் தளத்தில் என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு, கர்நாடக மாநிலத்தில் குண்டுவெடிப்பு ஆகிய சம்பவங்களை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு, பலரையும் கைது செய்து விசாரணை நடத்திவரும் நிலையில், தற்போது, திண்டுக்கலில் பி.எஃப்.ஐ அலுவலகத்தில் என்ஐஏ திடீர் சோதனை நடத்தி வருகிறது.