நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது.
அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..!
இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கோவையில் மெக்கானிக் அபிபுல் ரகுமான், நெல்லையில் ஓர் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பக்ருதீன் என்பவர் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை தொடர்கிறது.
இந்த சோதனையானது கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த சம்பவத்தின் கீழ் 15 பேர் கைது செய்யப்பட்டு தற்போது வரையில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் உள்ளனர்.
தற்போது வரையில் இந்த சோதனை மற்றும் சோதனை நடைபெறும் இடங்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…