போலி பாஸ்போர்ட் விவகாரம்.? மதுரையில் NIA அதிகாரிகள் தீவிர சோதனை.!
சமீப காலமாகவே தீவிரவாத கண்காணிப்புகள் குறித்து வழக்குகளை விசாரணை செய்யும் தேசிய புலனாய்வு அமைப்பான NIA இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கோவை குக்கர் வெடிப்பை அடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டது.
தற்போது NIA சோதனையானது மதுரையில் அதிகாலை நிலையை தொடங்கியுள்ளது. மதுரை காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள காஜிமார் தெருவில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காஜிமார் தெருவில் வசித்து வந்த முகமது தாஜித் என்பவர் வீட்டில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இவர் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் என்றும், பல மாதங்களாக இவர் தலைமறைவாக இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முகமது தாஜீக் வீடு மட்டுமின்றி அவரது சகோதரர் உஸ்மான் வீட்டிலும் இந்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.