மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு.! திருப்பூர் இளைஞரை பெங்களூரு அழைத்து சென்ற NIA அதிகாரிகள்.!

Default Image

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு தொடர்பாக திருப்பூர் இளைஞரை என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர். 

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் ஒரு குக்கர் குண்டு வெடித்தது. இதில் பயணித்த ஷாரிக் எனும் இளைஞர் மற்றும் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக மாநில காவல்துறையினர் முதற்க்ட்ட விசாரணை செய்து இதில் பயங்கரவாத விவகாரம் இருப்பதை அறிந்து , உடனடியாக என்ஐஏ அதிகர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஊட்டி, நாகர்கோவில் : பின்னர் ஷாரிக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் எடுத்தனர். இதனை தொடர்ந்து ஷாரிக்கிற்கு சிம் கார்டு வாங்கி கொடுத்ததாக ஊட்டியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் என அவரிடமும், அடுத்து, நாகர்கோவிலை சேர்ந்த ஒரு இளைஞரிடமும் தீவிர விசாரணை நடத்தினர் என்ஐஏ அதிகாரிகள்.

திருப்பூர் இளைஞர் : இதனை தொடன்கிர்த்து ன்று,  திருப்பூரில் என்ஐஏ அதிகாரிகள், முகமது ரிஸ்வான் என்பவரது இல்லத்தில் சோதனை நடத்தினர்.இவருக்கும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது என சோதனை செய்து வந்தனர். இந்த விசாரணையை அடுத்து, அடுத்தகட்ட விசாரணைக்காக, திருப்பூர் இளைஞரை பெங்களூரு அழைத்து சென்றுள்ளனர் NIA அதிகாரிகள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்