கோவை கார் வெடி விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த ஜமேஷ் முபின் உடல் கருகி உயிரிழந்தார்.
காரை காவல்துறையினர், தடவியல் நிபுணர் குழுக்கள் சோதனை செய்ததில் காரில் 2 சிலிண்டர் வெடித்ததும் , காரில் இரும்பு ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் ஆகியவை இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், ஜமேஷ் முபின் வீட்டில் சோதனை செய்ததில் வெடி தயாரிக்கும் மூல பொருட்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
மேலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஜமேஷ் முபினுக்கு உதவியதாக 5 பேர் உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்ற காவலில் விசாரணையில் இருக்கின்றனர்.
கோவை காவல்துறையினர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ-வை சேர்ந்த அதிகாரிகள் இன்று கோவைக்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் வெடித்த இடம், முபின் வீடு என பல்வேறு இடங்களில் தனி தனி குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
தற்போது வரை இந்த வழக்கு தமிழக காவல்துறை வசமே இருக்கிறதாம். இன்னும் என்ஐஏ அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்படவில்லையாம். தற்போது வழக்கமான ஆய்வு பணிகளை தான் என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…