தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு 5 பேரை கைது செய்தது என்ஐஏ.
தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நிலையில், 5 பேரை கைது செய்துள்ளது. இதில், சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கலை சேர்ந்த முகமது கைசர் மற்றும் தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகியோரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட உங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய 6 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில், கூர் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்டவிரோத ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் (PFI) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது அடுத்து, தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…