தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ. சோதனை – 5 பேர் கைது!

NIA CaseTN 5

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பிறகு 5 பேரை கைது செய்தது என்ஐஏ.

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை  நிலையில், 5 பேரை கைது செய்துள்ளது. இதில், சென்னையை சேர்ந்த அப்துல் ரசாக், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது யூசப், முகமது அப்பாஸ், திண்டுக்கலை சேர்ந்த முகமது கைசர் மற்றும் தேனியை சேர்ந்த சாதிக் அலி ஆகியோரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதன்படி, சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட உங்களில் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய 6 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில், கூர் ஆயுதங்கள், டிஜிட்டல் ஆவணங்கள், சட்டவிரோத ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேருக்கு எதிராக என்.ஐ.ஏ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் (PFI) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது அடுத்து, தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்