SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகியை கைது செய்தது என்.ஐ.ஏ!

NIA

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன், SDPI நிர்வாகி மற்றும் PFI முன்னாள் நிர்வாகி இருவரும் தொடர்பில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் கைது.

தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். என்ஐஏ வழக்குகளில் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பம் நகரில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சாதிக் அலி கைது செய்யப்பட்டுள்ளார். சாதிக் அலி வீட்டில் இன்று சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்த சாதிக் அலியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுபோன்று, திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரில் PFI முன்னாள் மண்டல தலைவர் முகமது கைசரை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ. முகமது கைசர் வீட்டில் சோதனை நடத்திய நிலையில், என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்துடன் (PFI) தொடர்ந்து செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்