ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன்-பன்னீர்செல்வம்
நேற்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது.பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 1742 கோடியில் 28,671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் ரூ 276 கோடியில் 12,766 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அடுத்த முறை கண்டிப்பாக ஆஜராவேன் .ஆணையத்தில் ஆஜராகும்போது எனக்கு தெரிந்த உண்மைகளை சொல்வேன் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.