அடுத்த மாதம் வங்கிக் கணக்கில் ரூ.2000 வருகிறது? எப்படி தெரியுமா?

பொங்கல் பண்டிகைக்கு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூ.1000 கொடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே, மகளிர் உரிமை தொகை ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கொடுக்க ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜனவரி 14 ஞாயிறு, 15ம் தேதி பொங்கல் என்பதால், அதற்கு முன்னதாக ஜனவரி 12 அல்லது 13ம் தேதியே பொங்கல் பணம் 1000 ரூபாயும், மகளிர் உரிமை தொகை ரூ.1000 என மொத்தமாக ரூ.2000-ஐ வங்கி கணக்கில் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த வருட கடைசி நேரத்தில் சில மாவட்டங்களுக்கு இயற்கை பேரிடராக வெள்ளம் வந்து துயரமாக அமைந்துவிட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பொதுமக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்டைந்தது.
பேரிடர் நிதி ரூ.900 கோடி வழங்கப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்..!
இதனை தொடர்ந்து, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 90செ.மீ பெய்த வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் பாதிப்பால் பலர் தங்களது உடமைகள் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா ரூ. 6000 எனவும், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தாலா ரூ.1000 என நிவாரணம் அறிவிப்பு வெளியானது.
முன்னதாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ. 6000 என அறிவிக்கப்பட்டு வழங்கும் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்ததாக சொல்லப்படுகிறது.
கனமழை பாதிப்பு.! ரேஷன் கார்டுக்கு ரூ.6000 நிவாரணம்.! முதல்வர் அறிவிப்பு.!
இப்பொது, இயற்கை பேரிடருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகை குறித்து எவ்வாறு முடிவெடுக்க போகிறது என்று தெரியவில்லை. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம் போல் கொடுப்பது உண்டு என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகை ரூ.1000 கொடுக்காமல், 10க்கும் மேற்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.