சற்று முன் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் முதல்வர் யார் என்பதில் போட்டி கிடையாது. முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. அடுத்த ஆட்சி அதிமுக தான், அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள்கள் முன் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆதரவாளர்கள் தனித்தனியாக பதாகைகள் வைத்து இருந்தனர்.இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடந்ததாக தகவல் வெளியாகியது.
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆனால், இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாமல் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், பிற்பகல் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்தார். இது விபத்தா?…
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…