கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், ஒருபக்கம் அனைத்து அரசியல் கட்சிகளுகம் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுபக்கம் முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீட்டில் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இன்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள், செந்தாமரை வீடு மற்றும் மருமகன் சபரீசன் வீட்டிலும் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அண்ணாநகர் திமுக வேட்பாளர் மோகனின் மகன் கார்த்திக், ஜீ ஸ்கொயர் பாலா வீட்டிலும் சோதனை மேற்கொள்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் திமுகவினர் வீடுகளில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் இன்று காலை முதல் சுமார் 15 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடைபேற்று வருகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.
ஜார்ஜ் பார்க் : இந்தியா - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டியானது இன்று நடைபெற்றது. இந்த போட்டியில்…
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…