வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும். – வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தகவல்.
வானிலை ஆய்வு தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தமிழக வானிலை, மலையளவு குறித்த விவரங்களை வெளியிட்டார். அவர் குறிப்பிடுகையில், கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது என தெரிவித்தார். அதிகபட்சமாக மயிலாடுதுறையில் அதிக மலையளவு பதிவாகியுள்ளது என கூறினார் .
மேலும், அடுத்த 24 மணிநேரத்தில் கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், குமரிகடல், தென்மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா என தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று இன்றும் நாளையும் வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அரபி கடல் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார் .
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…