#Breaking : தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நேற்று டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதிலும் இரண்டு இடங்களில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பதிவாகி இருந்து. இதனை தொடர்ந்து மேலும் 3 நாளுக்கு இந்த கனமழை தொடரும் என கூறப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளான திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நகை ஆகிய மாவட்டங்கள் உட்பட மொத்தமாக 23 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து அக்டோபர் இறுதியில் வடகிழக்கு பருவ மழை பெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.