“6 மாதத்தில் அடுத்தடுத்து 10 செயற்கைக் கோள்”அசத்தும் இஸ்ரோ..சொல்கிறார் சிவன்..!!
அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்திராயன் 2 விண்ணில் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் வெற்றி எதிர்கால திட்டங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதங்களில் மேலும் பத்து செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாக கூறினார்.
வரும் காலங்களில் செலுத்தப்படும் செயற்கைக் கோள்கள் பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு உதவும் வகையில் தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்கும் என்றும் சிவன் தெரிவித்தார்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீதான பொய்யான வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு பதிலளித்த அவர், இப்பிரச்சினைக்கும் இஸ்ரோவுக்கும் எந்த தொடர்புமில்லை என்றும், இது கேரள அரசு சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் விளக்கம் அளித்தார்.
DINASUVADU