ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரிப்பு: அமெரிக்க இளைஞர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்…!!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்தி சேகரித்த விவகாரத்தில் அமெரிக்க இளைஞரின் விசாவை ரத்து செய்து போலீசார் திருப்பி அனுப்பினர்.
அமெரிக்கா இளைஞரிடம் விசாரணை :
அமெரிக்காவை சேர்ந்த மார்க் சியல்லா என்பவர் சுற்றுலா விசாவில் தூத்துக்குடிக்கு வந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மார்க் சியல்லாவிடம் போலீசார் விசாரணை நடத்தி, அவரிடம் இருந்த கேமரா, லேப்டாப் ஆகியவைகளை ஆய்வு செய்தனர்.
விசாவை ரத்து செய்து நடவடிக்கை :
சுற்றுலா தளங்களை மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மார்க் சியல்லா, விசா விதிமுறைகளை மீறி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக செய்திகள் சேகரித்ததாக தெரிகிறது. இதையடுத்து, மார்க் சியல்லாவின் விசாவை ரத்து செய்த போலீசார், அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பினர்.