2018 தமிழக பட்ஜெட்:புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் ரூ.34 கோடியில் அமைக்கப்படும்!
பட்ஜெட்டில் நெல்லை, மதுரை,கன்னியாகுமரி,கோவை மருத்துவக் கல்லூரிகளில் 345 புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ,மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் மருத்துவக் கல்லூரிகளில் புதிய இடங்கள் உருவாக்கப்படும் என்றும் ரூ.34 கோடியில் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய கோபால்ட் அலகுகள் அமைக்கப்படும் என அறிவித்தார். ரூ. 48 கோடியில் மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக அரசின் வருவாய் ரூ. 1.81 லட்சம் கோடி,செலவு ரூ. 2. 04 லட்சம் கோடி, பற்றாக்குறை ரூ. 23 ஆயிரத்து 176 கோடி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.