மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேல் மறைவு – ஓ.பன்னீர்செல்வம் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்கவேல் மறைவுக்கு ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கே.டி.தங்கவேல் அவர்கள் இன்று காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.கே.டி.தங்கவேல் அவர்கள் இன்று காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவர்சார்ந்த இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 13, 2020