தூத்துக்குடியில் புதுமண தம்பதிகள் வெட்டி கொலை – 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Thoothukudi Murder

தூத்துக்குடியில், முருகேசன் நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவரின் மகன் மாரி செல்வமும், தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மூத்த மகள் கார்த்திகாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில், இருவரும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதர ரீதியாக பின்தங்கியவர் என்பதால், பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தது. இருப்பினும் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன் திரண்ட வியாபாரிகள்..!

இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து, தூத்துக்குடி முருகேசன் நகரில் அவர்கள் இருந்தபோது மர்ம கும்பல் வீடு புகுந்து மாரி செல்வம், கார்த்திகேயன் இருவரையும் அரிவாள் உள்ளிட்ட கூறிய ஆயுதங்களால் வெட்டி உள்ளது.

இதனையடுத்து, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் இருவரின் உடலும், மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகள் உத்தரவின் பெயரில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். உயிரிழந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் 2 பேர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கருப்பசாமி, பரத் விக்னேஸ்குமார் ஆகிய இருவர் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் சரணடைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்