தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தூத்துக்குடி முருகேசன் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன் மாரி செல்வம் (வயது 24) தனியார் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரது மூத்த மகளான கார்த்திகாவை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், இந்த விவகாரம் வீட்டுக்கு தெரிந்து உள்ளது. இதில் பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனை அடுத்து மாரி செல்வம் – கார்த்திகா காதல் ஜோடி கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு கோவில்பட்டியில் இருவரும் தங்கியுள்ளனர்.
நெல்லையில் மீண்டும் ஒரு சாதிய வன்கொடுமை சம்பவம் – பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்..!
திருமணம் முடித்து நேற்று தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். தூத்துக்குடியில் முருகேசன் நகரில் இருவரும் வசித்து வந்துள்ள நிலையில், நேற்று ஒரு மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் காதல் ஜோடியை வீடு புகுந்து வெட்டி உள்ளது.
ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திகா – மாரிச்செல்வம் இருவருமே உயிரிழந்து விட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்த சிப்காட் காவல் துறையினர், மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உயிரிழந்த மாரி செல்வம் – கார்த்திகாவின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை செய்து, தப்பி ஓடிய கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்துள்ளனர். கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கத்திற்கு மூன்று மகள்கள். இதில் மூத்த மகள் தான் கார்த்திகா. மாரிச்செல்வம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்த்திகா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அதனால் இந்த கொலை சம்பவத்தில் கார்த்திகாவின் குடும்பத்தினர் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து, அதன் பெயரில் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…