புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் டிசம்பா் 31-ம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1 மணி வரை நடைபெறும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் எவ்வித அசம்பாவிதமும் நடக்கலாம் இருக்க காவல்துறை பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதில் ஹோட்டல்கள், நட்சத்திர உணவு விடுதிகள், ஆகிய இடங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக சோதனை செய்யவேண்டும் . நுழைவு வாயில்கள் , நிகழ்ச்சி , விருந்து நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்பட்ட அரங்கத்திலேயே நடத்த வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிக்காக நீச்சல் குளத்தின் அருகில் மேடை அமைக்கக் கூடாது.
நீச்சல் குளத்துக்கு செல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளின்போது பெண்களை கேலி செய்வதை தடுக்க பாதுகாப்பு ஊழியா்களை நியமிக்க வேண்டும் . வளாகத்தினுள் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அனைத்து விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி, வெற்றி…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…