நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என கட்டுப்பாடுகள் விதிப்பு.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80% பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த கூடாது எனவும் காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது. ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தரப்படும் OR CODE-ஐ மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஒட்ட வேண்டும்.
சென்னையில் நட்சத்திர ஓட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை ஆலோசனை நடத்திய பிறகு இந்த கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஹோட்டல் நிர்வாகிகள் விளக்கமளித்தனர். அதிக போதையில் இருக்கும் நபர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…