தமிழகம் முழுவதும் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்!
புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கன பக்தர்கள் கடலில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த திரு உத்தரகோசமங்கை கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஒரே மரகதக்கல் நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு அகற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. ஒலி – ஒளியால் மரகதக் கல் சேதம் அடையும் என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு சந்தனக்காப்பிலேயே இருக்கும். சிறப்பு வழிபாடுகளைக் காண தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக வினாயகர் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்களும், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.
source: dinasuvadu.com