புத்தாண்டு கொண்டாட்டம்- மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
- புத்தாண்டு தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது.
- புத்தாண்டை முன்னிட்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படம் பண்டிகை ஆகும்.புத்தாண்டு தினத்தன்று அனைவரும் குடும்பத்துடன் சுற்றுலாத்தளங்களுக்கு செல்வது வழக்கம் ஆகும்.நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.28 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.