புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னை மாநகர காவல் ஆணையர் விளக்கம்!
மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், புத்தாண்டு தினத்தையொட்டி சென்னையில் 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஈசிஆர் மற்றும் மெரினா உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறினார். இதன்பின் பேசிய அவர், கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக குறைவான வழக்குகளே பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டார்.