#BREAKING: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தர் நியமனம்..!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக முத்து காலிங்கன் கிருஷ்ணன் நியமனம்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பதவி வகித்த முத்து காலிங்கன் கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக இருப்பார் என மத்திய உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.