விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை தொடங்கியது.
அப்பொழுது 110 – விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அவரது அறிவிப்பில் ,திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.