கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க புதிய கருவி கண்டுபிடிப்பு.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பராமரித்து வரும் மருத்துவர்கள், எவ்வளவு தான் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தாலும், அதையும் தாண்டி இந்த வைரஸ் அவர்களை தாக்குவதுடன், இந்த வைரஸ் தாக்கத்தால் பல மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி.யில் செயல்பட்டு வரும் உடல் ஆரோக்கியம் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் மையம், ஆரோக்கியம் தொடர்பாக ஐ.ஐ.டி. நடத்தி வரும் புத்தொழில் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் ஹெலிக்சன் நிறுவனம் ஆகியவை புதிய கருவியை கண்டுபிடித்து உள்ளது.
இவர்கள் கண்டுபிடித்துள்ள, இந்த கருவியை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால், அந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரிமோட்’ சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோ துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
இந்த கருவியை கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விரலில் பொருத்தினால் போதும். அந்த கருவியில் பொருத்தப்பட்டுள்ள ‘ரிமோட்’ சென்சார் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு, இதய துடிப்பு, சுவாசம் போன்ற முக்கியமான அளவீடுகளை மற்றொரு அறையில் இருந்து செல்போன் மூலமாகவோ அல்லது மருத்துவமனைகளின் கட்டுப்பாட்டு மையத்தின் மூலமோ துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
மேலும், இந்த கருவியை ஒருவருக்கு பயன்படுத்தினாலும், மற்றவருக்கும் பயன்படுத்தலாம். இந்த புதிய கருவியை ஒரு ஆண்டுகள் வரை உபயோகப்படுத்தலாம்.