பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு.
அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளதாக அறிவித்திருந்தது.
மேலும், நடப்பாண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் வரும் 18ஆம் தேதி வெளியிடப்படும் என்றும், புதிய பாடத்திட்டத்திற்கு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்வி குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.