தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 30,000 நெருங்கிய கொரோனா பாதிப்பு ..!
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 29,272 பேர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29,272 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 14,38,509 ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 7,466 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனாவால் இன்று 298 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,178 ஆக அதிகரித்துள்ளது, மேலும் கொரோனாவால் இன்று 19,182 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 12,60,150 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர், மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,56,111 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன
மேலும் இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,43,10,931 ஆகவும், தற்போது 1,62,181 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது