5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு.
அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல்செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்து வருகிறார்.
5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள்
இந்த வேளாண் பட்ஜெட்டில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.
சிறுதானிய திருவிழாக்கள்
சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும். ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2,504 கிராமங்களில் ரூ.230 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.