கிராமப்புற இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு… மத்திய அரசின் புதிய திட்டம்…

Default Image

மத்திய அரசின் புதிய  திட்டத்தில், இலவச ஆடை உற்பத்தி பயிற்சி முடித்து, உடனடி வேலை வாய்ப்பு பெற, கிராமப்புற இளைஞர்களுக்கு திருப்பூர்  ‘நிப்ட் – டீ’ கல்லுாரி அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம்  முதலிபாளையம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா என்ற திட்டத்தில்  கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. இதற்காக, திருப்பூர் முதலிபாளயம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி வளாகத்தில் 2, மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்று என மொத்தம் மூன்று பயிற்சி மையங்கள் இயங்குகின்றன.இந்த திட்டத்தில், கிராமப்புற இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களின் தகுதிக்கு ஏற்ப, 5ம் வகுப்புக்கு மேல் படித்தோருக்கு, தையல் பயிற்சியும், பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்தோருக்கு, மெர்ச்சன்டைசிங், உற்பத்தி மேற்பார்வையாளர், பேஷன் டிசைனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுவரை, மொத்தம், 700 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலால், கடந்த ஆறு மாதங்களாக பயிற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வால், கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளிக்கும் இந்த திட்டத்தை ‘நிப்ட் – டீ’ கல்லுாரி மீண்டும் செயல்படுத்த துவங்கியுள்ளது. தற்போது இப்பயிற்சியில் இணைவதற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்