ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டுமே ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் 33 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் தமிழகத்தில் 34 பேர் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.
சென்னையில் 26 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பெருக்கும் மற்றும் சேலத்தில் ஒருவருக்கும் ஒமிக்ரான் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது அதிகரித்து வரும் ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கான தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தேவைப்பட்டால் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்துவது, பண்டிகை காலங்கள் நெருங்குவதால் தமிழகத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது, ஒமிக்ரான் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
சென்னை : ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…