“அதிமுக புதிய துணை நிர்வாகிகள்” – ஓபிஎஸ் & ஈபிஎஸ் அறிவிப்பு..!
அதிமுக புதிய துணை நிர்வாகிகளை அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது
கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி
- இணைச் செயலாளர் – திரு. S. முகமது ரபி (எ) S.M. ரபீக் அவர்கள் (ராயல் கார்டன் 7-வது தெரு, கருப்பாயூரணி, மதுரை மாநகர் மாவட்டம்)
கழக மாணவர் அணி
துணைச் செயலாளர் – திரு. A., பழனி, B.A., B.L., அவர்கள் (சென்னை மாநகராட்சி நிலைக் குழு முன்னாள் தலைவர்,தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டம் )
கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு:
துணைச் செயலாளர் – திரு. ஒய். ஜவஹர் அலி, B.Com., அவர்கள் (கழக செய்தித் தொடர்பாளர்,தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டம் )
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்” ,என்று தெரிவித்துள்ளனர்.