வேலூர் மாவட்டம் மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிய குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். அதன்படி, மேல்மொனவூரில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 220 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டம் கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், வேலூர் உள்பட சேலம், தருமபுரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 1,591 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
இதற்கிடையில், இந்திய சமூக ஆர்வலரான தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட மூத்த அமைச்சர்கள் பலரும், வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலரும் சாதிய ஏற்றத்தாழ்வு, தீண்டாமைக்கு எதிராக சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர். இதைத்தொடர்ந்து, வேலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இதுவரை கட்டி முடிக்கப்பட்ட 1,591 புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் எப்போது தான் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்,…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் அடுத்த வருடம் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரானது நடைபெறவுள்ளது. இந்த தொடர் 7 வருடங்களுக்கு பிறகு…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும்,…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில்…
சென்னை : பெஞ்சல் புயல் எதிரொலியாக சென்னை உட்பட பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், மையம்…