புதிய தளர்வு – ஆலோசனையை தொடங்கிய முதல்வர் ..!
- ஊரடங்கில் புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதியுடன் தளர்வுடன் கூடிய ஊரடங்கு காலை 6 மணியுடன் முடியும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பதா..? அல்லது மேலும் தளர்வுகள் அளிப்பதா..? பற்றி உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர், மருத்துவர் துணைச்செயலாளர், டிஜிபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிப்பதற்கு முன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 30,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று தமிழகத்தில் 17,321 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.