பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!
தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள்குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படவுள்ள மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்தும், நடைமுறையில் உள்ள 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. மார்ச் 20-ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆலோசனை நடைபெறுகிறது.