அடிதூள்..ஆங்கிலம் கற்க புதிய செயலி – கூகுள் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Default Image

பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழி திறனை மேம்படுத்த கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம். 

சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி, ரூ.181 கோடி செலவில் கட்டப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதன்பின்னர் முத்தமிழ் பொழிப்பெயர்பு, இளந்தளிர் இலக்கியம், திசைதோறும் திராவிடல் திட்டத்தில் நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூகுள் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தை எளிதாக கற்க, பேச கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, Google Read Along செயலியை அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்த ஏதுவாக Google India & School Education இடையே முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் தலைமை செயலாளர் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்